செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 4 ஜூலை 2018 (19:46 IST)

கிரிமியாவை உக்ரைனிடம் ஒப்படைக்க வேண்டும்; ரஷ்யாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

கிரிமியாவை உக்ரைனிடம் ஒப்படைக்கும் வரை ரஷ்யா மீதான் பொருளாதா தடை தொடரும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

 
சோவியத் யூனியன் உடைந்த பின் 2014ஆம் ஆண்டில் கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதற்கு உக்ரைன் மற்றும் உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்கா உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுத்து வருகிறது.
 
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் இதுவரை அதிகாரப்பூர்வமாக சந்தித்தது இல்லை. இவர்களது சந்திப்பு மூன்றவது நாடான ஐரோப்பா பின்லாந்து தலைநகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் கிரிமியவை உக்ரைனிடம் ஒப்படைத்தால் மட்டுமே ரஷ்யா மீதான பொருளாதார தடை தொடரும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.