வெள்ளி, 7 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 16 டிசம்பர் 2016 (14:07 IST)

டெக்னாலஜி துறையில் தலையிடும் டிரம்ப்!!

அமெரிக்க தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதில் அமெரிக்க டெக்னாலஜி நிறுவனங்கள் மகிழ்ச்சி அடையவில்லை.


 
 
ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உலகின் மிகப் பெரிய டெக்னாலஜி நிறுவனங்களை அழைத்து கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளார். 
 
பேஸ்புக், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ், மைக்ரோசாப்ட், ஒரக்கிள், சிஸ்கோ, ஐபிஎம், இண்டெல், ஆல்பாபெட் மற்றும் கூகுள் போன்ற முன்னணி நிறுவனங்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
 
ஆப்பிள், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் கூடுதல் நேரம் பெற்று டிரம்ப்புடன் பேசினர்.
 
‘நான் இங்கு உங்களுக்கு உதவுவதற்காகவே உள்ளேன், என்னை எதிர்ப்பவர்களுக்கு மதிப்பளிக்கிறேன். ஆனால் இங்கு உள்ள அனைவரும் என்னைக் கொஞ்சமாவது விரும்ப வேண்டும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.  
 
இப்போது நடந்த கூட்டத்தை போன்று ஒவ்வொரு காலாண்டிலும் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். 
 
இக்கூட்டத்தில் டிவிட்டர் நிறுவனத்திற்கு டிரம்ப் அழைப்பு விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.