1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 12 அக்டோபர் 2018 (16:42 IST)

உயிரியல் பூங்காவில் ஊழியரை கொன்றது புலி!

ஆசிய நாடுகளில் ஒன்றான ஜப்பான் தொழில்நுட்பத்திற்கும் ,ரோபோக்களுக்கும் பெயர் பெற்றது. மிக வேகமாக பொருளாதாரத்தில் வளர்ந்து விட்டதற்கு இங்குள்ள சுறுசுறுப்பான மக்களின் சளைக்காத உழைப்பும் ஒரு முக்கிய காரணமாகும்.
ஜப்பான் நாட்டில் ககோஷிமா என்ற இடத்தில்  ஹிரகவா ,என்ற ஒரு உயிரியல் பூங்கா உள்ளது இதில் நான்கு வெள்ளைப்ப்புலிகள் வளர்ந்து வருகின்றன.
 
இந்த புலிகளை வழக்கம் போல பராமரிப்பதற்காக சென்ற அங்குள்ள  ஊழியர் ஒருவரை ஒரு புலி கடித்து கொன்று விட்டது.

ஊழியரது அலரலைக் கேட்ட  மற்ற ஊழியர்கள் புலியிடம் காயம்பட்ட ஊழியரை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து போனதாக கூறியுள்ளார்.
 
இதனையடுத்து பூங்காவில் மற்ற எவரையும் அந்த புலி கடிப்பதற்கு முன் அதற்கு மயக்க ஊசி கொடுத்து ஓய்வு எடுக்க வைத்தனர்.
 
இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.