திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 27 மார்ச் 2020 (16:04 IST)

கொரொனாவில் இருந்து மீளும் சீனா – விரைவில் திறக்கப்படும் திரையரங்குகள் !

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்தான் இப்போது உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒற்றைச் சொல்.

கடந்த ஜனவரியில் சீனாவில் தீவிரமடைய தொடங்கிய கொரோனா வைரஸ் வேகமாக உலக நாடுகள் அனைத்துக்கும் தற்போது பரவியுள்ளது. தென் கொரியா, ஜப்பான் என மெல்ல பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும் உயிர்சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது அமெரிக்கா உலக அளவில் அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்று உள்ள நோயாளிகளைக் கொண்ட நாடாக உள்ளது.

கடந்த இருவாரங்களாக சீனா கொரொனா தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளது. புதிதாக கொரோனா தொற்று உள்ள நோயாளிகளின் எண்ணிக்கைக் குறைந்துள்ளது. இதனால் சீனா கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலைக்குத் திரும்பி வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக சீனாவில் மூடப்பட்டு இருந்த திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது. இதையடுத்து மக்களை திரையரங்குகளுக்குக் கொண்டுவரும் பொருட்டு உலகப் புகழ்பெற்ற அவதார், அவெஞ்சர்ஸ் மற்றும் இன்செப்ஷன் உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களைத் திரையிட உள்ளதாக சொல்லப்படுகிறது.