விமானத்தில் குடிபோதையில் ஊழியரின் கையை கடித்த பயணி!
அமெரிக்காவை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆல் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் விமானத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு, ஊழியரின் கையை குடிபோதையில் பயணி கடித்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான டோக்கியோவில் இருந்து அமெரிக்காவின் சியாட்டில் நோக்கி, ஆல் நிப்பான் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டு சென்றது.
இந்த விமானத்தில் 159 பயணிகள் பயணித்த நிலையில், அதில் இருந்த பயணி ஒருவர் திடீரென விமான ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த விமானம் ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதன்பின்னர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, விமானத்தில் நடந்த சம்பவம் பற்றி தனக்கு நினைவில்லை என்று அவர் கூறியதாக தெரிகிறது. இதற்கு கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
மேலும், அந்த பயணி குடிபோதையில் இருந்ததாகவும், அவர் ஊழியரின் கையை கடித்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஜப்பான் விமான போக்குவரத்தில் இதற்கு முன் பல்வேறு சம்பவங்கள் நடந்து சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.