திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (13:33 IST)

மீண்டும் தாக்குதல் நடத்துவோம் – சவுதிக்கு தீவிரவாதிகள் எச்சரிக்கை !

சவுதி அரேபியாவில் மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள புக்கியாக் நகரில் இருக்கும் அரம்கோ நிறுவனத்தின் அப்குயிக் (Abqaiq) ஆலை மற்றும் குராய்ஸ் எண்ணெய் வயலிலும் எண்ணெய் நேற்று அதிகாலை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த தாக்குதலுக்கு ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமைப்புப் பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகமாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்பு ‘எங்கள் நீண்ட கைகள் நாங்கள் நினைக்கும் நேரத்தில் நினைக்கும் இடத்தில் தாக்குதல் நடத்தும் என சவுதி அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்’ எனக் கூறியுள்ளனர்.