1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 23 மார்ச் 2017 (05:52 IST)

இங்கிலாந்து பாராளுமன்றம் முன் தீவிரவாதி துப்பாக்கி சூடு. பிரதமர் தெரசாவுக்கு என்ன ஆச்சு?

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பாராளுமன்றம் அருகே நேற்று மர்ம நபர் ஒருவரால் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


 


துப்பாக்கி சூடு சம்பவம் காரணமாக உடனடியாக  பேலஸ் ஆப் வெஸ்ட்மின்ஸ்டர் தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும் அந்த பகுதியில் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி துப்பாக்கியால் சுட்ட நபர், பாதுகாப்புக்கு நின்ற போலீஸ்காரர் ஒருவரையும் கத்தியால் குத்தியுள்ளதாகவும், பாதுகாப்பு படையினர்களின் தாக்குதல் காரணமாக அந்த தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன,

இந்நிலையில் பாராளுமன்றத்தின் உள்ளே இருந்த சுமார் பிரதமர் தெரசா மே உள்ளிட்ட 400 எம்.பிக்கள் பத்திரமாக உள்ளதாக லண்டன் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.