1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 17 ஜனவரி 2025 (08:02 IST)

விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப்.. ஸ்பேஸ் எக்ஸ் அதிர்ச்சி..!

விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் ஸ்டார் ஷிப்பின்  முன்மாதிரி ராக்கெட் வெடித்து சிதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஸ்பேஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
ஸ்டார் ஷிப் விண்ணில் ஏவப்பட்ட 8 நிமிடங்களில் கட்டுப்பாட்டு மையத்துடன் உள்ள தொடர்பை இழந்ததாகவும், சோதனை முயற்சியில் ஏவப்பட்ட இந்த ராக்கெட் முன்மாதிரி செயற்கைகோலை சுமந்து சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இதுகுறித்து விஞ்ஞானிகள் தெரிவித்தபோது "ஸ்டார் ஷிப் உடனான அனைத்து தகவல் தொடர்புகளையும் இழந்து விட்டோம். இது அடிப்படையில் எங்களுக்கு ஒரு ஒழுங்கின்மை இருப்பதை காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஸ்டார் ஷிப் தொலைந்து போனதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
 
இதுகுறித்து ஸ்பேஸ் எக்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தனது சமூக வலைதளத்தில், "வெற்றி என்பது நிச்சயமற்றது, ஆனால் பொழுதுபோக்கு உறுதி" என்று குறிப்பிட்டு, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
இந்த நிலையில், ஸ்டார் ஷிப் வெடித்து சிதறியதைத் தொடர்ந்து 20 வணிக விமானங்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டதாகவும், விமானங்களின் மீது வெடித்து சிதறிய ராக்கெட்டின் குப்பைகள் விழுவதை தவிர்க்கவே பாதை மாற்றி அமைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
 
Edited by Siva