1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 6 ஜூன் 2018 (12:21 IST)

கூர்க்காப்படைகளை களமிறக்கும் சிங்கப்பூர்: யார் இந்த கூர்க்காப்படையினர்?

வடகொரியா மற்றும் அமெரிக்கா நாட்டு அதிபர்களான கிம் மற்றும் டிரம்ப் வரும் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பில் தென் கொரிய அதிபரும் பங்கேற்பார் என தெரிகிறது. 
 
அணு ஆயுத சோதனைகள் காரணமாக வடகொரியா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருந்தது, இதனால் வடகொரியா மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது. அதன் பின்னர் தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒளிம்பிக் வடகொரிய அதிபரிடம் சில மாற்றங்களை ஏற்படுத்தியது. 
 
வடகொரியா மற்றும் தென் கொரியா அதிபர்களின் சந்திப்பு கொரியா தீபகர்பத்தில் எப்போதும் நிலவிவந்த போர் பதற்றத்தை தணித்தது. அதன் பின்னர் வடகொரியா அதிபர் சீனாவிற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 
 
இந்நிலையில், டிரம்ப்பின் கோரிக்கையை ஏற்று வடகொரியா அதிபர் கிம் அவருடனான சந்திப்பை உறுதி செய்தார். இந்த சந்திப்பின் போது இருநாட்டு தலைவர்களும் தங்களது தனிப்படை பாதுகாவலர்களை அழைத்து வருவார்கள்.
 
இருப்பினும், இவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பூர் அரசு கூர்க்காப்படையை களமிறக்குகிறது. சுமார், 200 ஆண்டுகளாக கூர்க்காப்படையினர் சிங்கப்பூரில் செயல்ப்பட்டு வருகின்றனர். இவர்கள் நேபாளத்தை பூர்வீகமாக கொண்டவர்கள்.
 
கூர்க்காப்படையினர் உலகின் மிகவும் மூர்க்கமான பாதுகவலர்கள். இவர்கள் முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போரின் போது பல தலைவர்களுக்கு பாதுகாப்பு அளித்துள்ளனர். இவர்கள் தங்களது உறையில் இருந்து கத்தியை எடுத்துவிட்டால், ரத்தம் காணாமல் கத்தியை உள்ளே வைக்கமாட்டார்கள் என்ற கூற்றுள்ளது.