1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 18 ஜூலை 2022 (17:46 IST)

வரும் நாட்களில் கடுமையான வெப்பம்...90 கோடிப் பேர் பாதிக்கப்படலாம் என தகவல்!

சீனாவில் வரும் 23 ஆம் தேதி வரை கடுமையான  வெப்பம் நிலவும் என பிரபல செய்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கொரொனா தொற்று உருவாகி உலகம் முழுவதும் பெரும் பாதிப்பையயும் உயிரிழப்பையும் ஏற்படுத்தியது.

சில மாதங்களாகக் குறைந்திருந்த கொரொனா மீண்டும் பரவிவருகிறது. இது ஒருபக்கம் இருக்கத் தற்போது,சில நகரங்களில் வெல்ல அலைகள் பாதிப்பு அதிகரித்துள்ளது.

சீனாவில் குறிப்பாக, தெற்கு  மற்றும் தென் கிழக்கு ஆகிய பகுதிகளில் வரும் 26 ஆம் தேதி வரை கடுமையான வெப்பம் இருக்கும் எனவும், வரும் 31 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை இதற்கு முன் இல்லாத வகையில் அதிக வெப்பம் பதிவாகும் என பிரபல செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்னும் சில நாட்களில் கடும் வெப்ப அலைகள் வீச உள்ள  நிலையில், இதனால் 90 கோடிப்பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.