திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 10 மே 2017 (21:49 IST)

ஆசிரியரின் இருக்கையில் அமர்ந்த மாணவிக்கு நேர்ந்த கொடூரம்

அமெரிக்காவில் ஆசிரியரின் இருக்கையில் அமர்ந்த மாணவியிடம் அந்த ஆசிரியர் அநாகரீகமாக நடந்துக்கொண்டுள்ளார்.


 

 
அமெரிக்காவில் பென்னிங்டன் என்ற பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஆசிரியர் இல்லாத நேரத்தில் விளையாட்டாக அவரது இருக்கையில் அமர்ந்துள்ளார். இதைப்பார்த்த அந்த ஆசிரியர் மாணவியிடம் அநாகரீகமாக நடந்துள்ளார். 
 
அந்த மானவி ஒரு முஸ்லீம். அவர் புர்கா அணிந்திருந்தார். ஆசிரியர் மாணவியின் புர்காவை கழற்ற முயற்சித்துள்ளார். மாணவி பிடிகொடுக்காமல் ஆசிரியருடன் மல்லுக்கட்டியுள்ளார். இதில் அந்த மாணவிக்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனையில் அரசு தலையிட்டதால் அந்த ஆசிரியர் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார்.