வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 28 ஆகஸ்ட் 2019 (14:46 IST)

காஷ்மீர் இந்தியாவின் உள் விவகாரம்: காஷ்மீர் விவகாரம் மீதான ரஷ்யாவின் நிலை என்ன?

காஷ்மீர் இந்தியாவின் உள் விவகாரம் என ரஷ்ய தூதர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பல நாடுகள் தங்களது கருத்துகளை முன்வைத்து வருகின்றன. மேலும் பாகிஸ்தான் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் காஷ்மீர் விவகரத்தில் ரஷ்யா தொடர்ந்து இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்தியாவுக்கான ரஷிய தூதர் நிகோலே குடஷேவ் வெளியிட்ட அறிக்கையில், காஷ்மீர் இந்தியாவின் உள் விவகாரம், அதில் நாங்கள் தலையிடமாட்டோம் என தெரிவித்துள்ளார். மேலும் காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்த்துகொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.