1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 13 ஜூன் 2018 (12:01 IST)

அதிபர் கிம்மின் விநோத நடவடிக்கை: வெளியான உண்மை பின்னணி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் நேற்று சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். 
 
இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தி, பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
 
இந்த சந்திப்புக்கு வந்த வடகொரியா அதிபர் கிம் ஜாங்குக்கு, வரலாறு காணாத பாதுகாப்பு தரப்பட்டது. இதில் விநோதம் என்னவென்றால் அவர் சொந்தமாக டாய்லட் கொண்டு வந்திருந்ததுதான். 
 
இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. கிம் எப்போதும் சுயபாதுகாப்பில் தீவிரமாக ஈடுபாடு காட்டுபவர். எதிரிகளிடத்தில் தன்னைப்பற்றிய விவரங்கள் கசிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பாராம். 
 
அவர் பயன்படுத்தும் கழிப்பறையில் இருந்து வெளியேரும் கழிவுகளில் இருந்து கூட  அவரது உடல்நலம் குறித்தோ, உணவு பழக்கம் குறித்தோ எதிரிகளுக்கு எந்த ஒரு தகவலும் கிடைக்ககூடாது என்பதற்காக கழிப்பறையை கூட தன்னுடன் கொண்டு சென்றுள்ளார்.