1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 4 நவம்பர் 2023 (08:30 IST)

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 128 பேர் உயிரிழப்பு

Nepal
நேபாளத்தில் கடுமையான  நில நடுக்கம் ஏற்படுவது இன்று 3வது முறை என்ற நிலையில் பலியானோர் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது.

நமது அண்டை மாநிலத்தில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவாகியுள்ளது.

நேபாளத்தில் சக்திவாய்ந்த நில நடுக்கத்தின் எதிரொலியாக டெல்லி, பாட்னா உள்ளிட்ட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாகவும், கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறி  வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில   நடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. பலர் படுகாயங்களுடன் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.