1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Geetha priya
Last Modified: புதன், 9 ஏப்ரல் 2014 (13:26 IST)

பாகிஸ்தான் மார்கெட்டில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு: குறைந்தபட்சம் 20 பேர் பலி

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத அருகே உள்ள மார்கெட்டில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் குறைந்த பட்சம் 20 பேராவது பலியானதாகவும், இத்தாக்குதலில் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
காய்கறி மற்றும் பழங்கள் அதிக அளவில் விற்கப்படும் அந்த மார்கெட்டில்,  இன்று காலை ஏராளமான மக்கள் குவிந்தபோது குண்டு வெடித்ததால் பலி எண்ணிக்கை அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   
 
மேலும், இத்தாக்குதலில் காயமடைந்த 100 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால்  பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
 
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர்  நவாஸ் ஷரிப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  
 
தாலிபான் அமைப்பு இந்த செயலில் ஈடுபடவில்லை என மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.