1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: ஞாயிறு, 12 அக்டோபர் 2014 (11:46 IST)

மலாலாவுக்கு நோபல் பரிசு: தலிபான்கள் கடும் எதிர்ப்பு

பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்து வரும் மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதால் இதற்கு தலிபான் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 
 
2014 ஆம் ஆண்டின் உலக அமைதிக்கான நோபல் பரிசை இந்தியாவின் சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த் மற்றும் பாகிஸ்தான் சிறுமி மலாலா ஆகியோர் சேர்ந்து பெறவுள்ளனர்.

இந்நிலையில் மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்க, தலிபான் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நம்பிக்கை இல்லாதவர்களின் ஒரு முகவர் என்றும் மலாலாவை  விமர்சித்துள்ளது தலிபான் இயக்கம்.
 
மேலும் டுவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ள துணை அமைப்பான ஜமாத் உல் அஹ்ரார், மலாலா துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுக்கு எதிராக பேசிவருகிறார். நோபல் பரிசின் நிறுவனர் வெடிப்பொருட்கள் தயாரிப்பாளர் என்பது அவர், அறிந்திருக்க வாய்ப்பில்லை” என்று கூறியுள்ளது.