பசிபிக் கடலில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்! – சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு!
பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கு அப்பால் நியூ காலிடோனியா தீவுக்கு அருகே 7.7 ரிக்டர் அளவுகோல் கொண்ட பெரும் நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சுனாமி பேரலைகள் எழ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம் இந்த நிலநடுக்கத்தால் மேற்கு பகுதியில் உள்ள அலாஸ்கா, அமெரிக்க மேற்கு தீவு பகுதிகள் பக்கம் பாதிப்புகள் இருக்காது என்றும், கிழக்கில் ஆஸ்திரேலிய தீவு கூட்டங்களில் பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.