NO-DONG 2: ஏன் இந்த புதிய ஏவுகணை? வடகொரியாவின் டார்கெட் யார்?
NO-DONG 2 என்ற ஏவுகணையை அடுத்த சில மாதத்தில் வடகொரியா தயாரித்துவிடும் என தெரிகிறதாம். இதனால், உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை அணு ஆயுதம் தாங்கும் திறன் படைத்தது. இந்த ஏவுகணை வைத்து இந்ங்கிலாந்து தாக்கப்படலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இது போன்ற ஏவுகணையை எதிர்கொள்ளும் திரன் தற்போது இங்கிலாந்திடம் இல்லை என்ற காரணத்தால், இங்கிலாந்துக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை மட்டுமே வடகொரியா எதிரியாக பார்ப்பதால், இங்கிலாந்து மீது தாக்குதலுக்கான வாய்ப்புகள் குறைவு எனவும் கூறப்படுகிறது.
ஆனால், அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீது போர் தொடுக்கப்படும் நிலையில், இங்கிலாந்த் தனியாக ஒதுங்கிவிட முடியாது எனவே இதற்கு முன் எச்சரிக்கையாக வடகொரியா செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.