வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 30 மார்ச் 2020 (17:48 IST)

அமெரிக்கா வந்த பிரிட்டன் இளவரசரை பாதுகாக்க முடியாது: டிரம்ப்

அமெரிக்கா வந்த பிரிட்டன் இளவரசரை பாதுகாக்க முடியாது
அமெரிக்கா வந்துள்ள ஹாரி - மேகன் தம்பதியின் பாதுகாப்புச் செலவுகளை ஏற்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பிரிட்டன் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியும் அவர் மனைவி மேகனும் அரசக் குடும்ப பதவியிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்த நிலையில் தற்போது கனடாவில் தங்களுடைய மீதி வாழ்க்கையை கழிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது
 
இவர்களது முடிவை பிரிட்டனின் ராணி எலிசபெத் ஏற்றுக்கொண்ட நிலையில் சமீபத்டில் இருவரும் கனடாவில் அமெரிக்கா சென்றனர். மேகனின் சொந்த அமெரிக்கா என்பதால் அவர் அங்குள்ள தனது உறவினர்களை சந்திக்க வந்திருந்தார்.
 
இந்த நிலையில் அமெரிக்கா வந்திருக்கும் ஹாரி - மேகன் தம்பதிகளுக்கு அமெரிக்கா பாதுகாப்பு கொடுக்காது என்று அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது; பிரிட்டன் அரசுக்கும் ராணிக்கும் நான் நெருங்கிய நண்பர். அரசக்குடும்பத்தில் இருந்து வெளியேறிய ஹாரியும் மேகனும் இனி கனடாவில் வசிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அவர்கள் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்துள்ளனர். அமெரிக்க அரசு அவர்களின் பாதுகாப்புக்காகச் செலவு செய்யாது. அவர்களின் பாதுகாப்பை அவர்களே உறுதி செய்துகொள்ள வேண்டும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.