குடும்பத்தையே கொன்ற நபர் – ஒரு ஆண்டுக்குப் பிறகு ஒப்புதல் வாக்குமூலம் !
அமெரிக்காவில் தனது மனைவி மற்றும் இரு மகள்களைக் கொலை செய்த சம்பவம் குறித்து ஓராண்டுக்குப் பிறகு அவரே வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் நடந்துள்ளது .
அமெரிக்காவின் கொலேரேடோ மாகாணத்தைச் சேர்ந்தவர் கிரிஸ் வாட்ஸ். இவருக்கு ஷெரின் ஷானன் என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இதற்கிடையே ஷானன் மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்த இவர்களது குடும்ப வாழ்க்கையில் புயலாக வீசியுள்ளது ஒரு சம்பவம்.
கிரிஸ் வாட்ஸ்க்கு நிக்கோல் கேசிங்கர் என்ற பெண்ணோடு கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இதனையடுத்து அவருடன் வாழ்வதற்காக தன்னுடைய மனைவி மற்றும் இரு மகள்களையும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம். காரில் அழைத்து சென்று கொலை செய்துள்ளார். இந்த கொலை பற்றி வெளி உலகத்துக்குத் தெரியாத நிலையில் ஒரு வருடமாக கிரிஸ் குற்றவுணர்ச்சியால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து செரின் க்லேடன் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் இந்த கொலைகள் பற்றி கூறியுள்ளார். அந்த கடிதத்தில் தன் மூத்த மகள் தன்னைக் கொல்ல வேண்டாம் என்று கெஞ்சியது தன் வாழ்நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். இதை வெளி உலகுக்கு அறிவிக்கும்படியும் அவர் கூறியுள்ளார்.