வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Updated : வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (13:52 IST)

54 பேரை காம வேட்டையாடிய மருத்துவர்: 13 வயது சிறுமியும் அடக்கம்!

54 பேரை காம வேட்டையாடிய மருத்துவர்: 13 வயது சிறுமியும் அடக்கம்!

லண்டனில் மருத்துவர் ஒருவர் நூற்றுக்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள் செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மருத்துவர் தனது இச்சைக்கு சிறுமிகளை பயன்படுத்தியதும் தற்போது தெரியவந்துள்ளது.


 
 
47 வயதான மனிஷ் ஷா என்னும் இந்த மருத்துவர் மீது 65 பாலியல் அத்துமீறல் குற்றமும், 52 பாலியல் துன்புறுத்தல் குற்றமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் இந்த மருத்துவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
 
மொத்தம் இவர் மீது 118 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த குற்றங்கள் அனைத்தையும் அவர் கடந்த 2004 ஜூன் முதல் 2013 ஜூலை வரை செய்ததாக கூறப்படுகிறது. இவரால் 54 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
நீண்ட கால விசாரணைக்கு பின்னர் மருத்துவர் மனீஷ் ஷாவின் குற்றங்கள் அனைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி மருத்துவர் மனிஷ் ஷா சார்பாக பார்க்கிங்சைட் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.