செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 25 மே 2019 (15:01 IST)

நிலநடுக்கம், எரிமலை அடுத்து சுனாமியா?

இந்தோனேஷியா சமீப மாதங்களில் தொடர்ச்சியாக பல பேரிடர்களை சந்தித்து வருகிறது. கடந்த வாரங்களில் தொடர்ந்து இரண்டு நிலநடுக்கங்கள் இந்தோனேசிய பகுதிகளில் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் குறைவான நிலநடுக்கங்களே என்றாலும் இந்தோனேசிய பகுதிகளில் அது பதட்டத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுற்றுலா பகுதியான பாலியில் ஆகங் எரிமலை மீண்டும் வெடிக்க தொடங்கியிருப்பது அழிவுக்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து நிலநடுக்கம், எரிமலை சீற்றம் போன்றவை ஏற்படுவதால் சுனாமி ஏற்பட ஏதாவது வாய்ப்பிருக்குமோ என மக்கள் அச்சப்படுகின்றனர். இந்த பேரிடர் சம்பவம் உலகம் முழுவதையுமே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. சுமத்ரா தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவுதான் 2004ல் இந்திய கடலோர பகுதிகள் சுனாமியை சந்தித்தது.
தற்போது இந்தோனேசியாவில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருப்பதுடன், மக்களும் எரிமலையின் பாதிப்புக்கு உள்ளாகாத பகுதியில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.