1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 19 ஆகஸ்ட் 2017 (05:57 IST)

பார்சிலோனா தாக்குதலின்போது நூலிழையில் உயிர் தப்பித்த இந்திய நடிகை

சமீபத்தில் பார்சிலோனாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இருவர் தாறுமாறாக வேனை ஓட்டி பொதுமக்களின் மீது மோதி ஏற்படுத்திய தாக்குதலால் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த கொடூர சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த தாக்குதலில் இருந்து இந்திய நடிகை ஒருவர் நூலிழையில் தப்பித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது



 
 
இந்த தாக்குதல் நடந்தபோது இந்திய வம்சாவளி நடிகையான லைலா ரூவாஸ் என்பவர் அந்த பகுதியில் தான் இருந்ததாகவும், தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து தெரியவந்ததும் உடனடியாக அங்கிருந்த ஓட்டல் ஒன்றில் தனது மகளுடன் ஓடி சென்று ஒளிந்து கொண்டதாகவும், இதனால் நூலிழையில் அவர் பிழைத்ததாகவும் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
மொராக்கோ தந்தைக்கும், இந்திய தாய்க்கும் பிறந்தவர் லைலா ரூவாஸ். பிரிட்டன் டிவியில் புட்பாலர்ஸ் வைப் மற்றும் ஹோல்பி சிட்டி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.