இம்ரான்கானுக்கு 14 ஆண்டுகள் சிறை.. அவரது மனைவிக்கு 7 ஆண்டுகள் சிறை - பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு..!
ஊழல் வழக்கில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை, என்றும் அவரது மனைவிக்கு ஏழு ஆண்டுகள் சிறை என்றும் பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரிட்டனிலிருந்து பாகிஸ்தான் அரசுக்கு வர வேண்டிய பணத்தை, இம்ரான்கானுக்கு சொந்தமான அறக்கட்டளையில் வரவு வைத்து லஞ்சம் பெற்றதாக இம்ரான் கான் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்து பாகிஸ்தான் ஊழல் தடுப்பு துறை வழக்கு பதிவு செய்த நிலையில், இந்த வழக்கின் அனைத்து வாதங்களும் நிறைவடைந்து, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்த நிலையில், தற்போது அதற்கான தண்டனை விவரங்களை அறிவித்துள்ளார்.
இதன்படி, முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது மனைவிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran