மோடியை காண முன்பதிவு செய்த 40 ஆயிரம் இந்தியர்கள்: களைகட்டும் அமெரிக்கா
அமெரிக்காவில் நடக்க இருக்கும் அமெரிக்க இந்தியர்கள் மாநாட்டிற்கு மோடி செல்வதையொட்டி 40 ஆயிரம் பேர் மாநாட்டில் கலந்து கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
அமெரிக்க இந்தியர்களால் நடத்தப்படும் ”ஹவுடி மோடி” என்ற மாநாடு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் உள்ள ஹாஸ்டன் நகரில் நடக்க உள்ளது. ஐ.நா சபையில் கலந்துகொள்ள செல்லும் பிரதமர் அங்கு சந்திப்பு முடிந்ததும் ஹாஸ்டன் சென்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணங்கள் ஏதும் கிடையாது. ஆனாலும் இலவச டிக்கெட்டுகளை சில சோதனைகளுக்கு பிறகே தருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இதுவரை 40 ஆயிரம் இந்தியர்கள் முன்பதிவு செய்துள்ளனர். பிரதமர் வருவதால் அவரை வரவேற்க பல கலை நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்துள்ளனர் அமெரிக்க இந்தியர்கள்.