திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 12 ஆகஸ்ட் 2017 (21:06 IST)

10 வயதில் 8 மாத கர்ப்பம்: அதிர வைத்த சிறுமி!!

அர்ஜென்டினாவில் 10 வயது சிறுமி தனக்கே தெரியாமல் 8 மாதங்கள் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த நிகழ்வு அர்ஜென்டினாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமி இது குறித்து தாயிடம் கூறியுள்ளார். மருத்துவமனைக்கு சென்ற போது சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 
 
ஆனால், கர்ப்பமாக இருப்பதை அந்த சிறுமி உணரவில்லை. அர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்டப்படி குற்றம்.
 
ஆனால், பாலியல் துன்புறுத்தலால் கர்ப்பமடைந்தவர்களின் உயிருக்கு பாதிப்பு ஏதும் இல்லையெனில் கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கப்படும்.
 
சிறுமியோ 8 மாத கர்ப்பம் என்பதால் மருத்துவர்கள் கருக்கலைப்பு செய்ய முடியாது என தெரிவித்துள்ளனர்.