1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (05:22 IST)

பிரான்ஸ் அதிபர் தேர்தல்: வெற்றி பெறுவது யார்?

ஐரோப்பிய நாடுகள் அனைத்துமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த தேர்தலில் , ஐரோப்பிய யூனியன் ஆதரவு வேட்பாளர் மக்ரோன் 23.9 சதவிகித வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரான்ஸ் விலக வேண்டும் என்று கூறி வரும் தேசிய முன்னணி வேட்பாளர் லி பென், 21.4 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளார்.



 


இந்த தேர்தலில் போட்டியிட்ட 11 வேட்பாளர்களில் மற்ற வேட்பாளர்கள் அனைவரும் குறைந்த சதவிகித வாக்குகளே பெற்றனர். இந்நிலையில் அடுத்த சுற்று தேர்தலில் மக்ரோன் மற்றும் லிபென் ஆகியோர் மோதுவார்கள். இவர்களில் வெற்றி பெறும் நபர் அடுத்த பிரான்ஸ் அதிபராக பதவியேற்பார்.

பிரான்ஸ் தேர்தலில் மக்ரோன் முன்னிலை பெற்றதை அடுத்து நே\ற்று யூரோ நாணயத்தின் மதிப்பும், நேற்று சற்று உயர்ந்தது.  அவருக்கு, ஐரோப்பிய யூனியன் தலைவர் ஜீன் கிளவுடு ஜூங்கர் வாழ்த்து தெரிவித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.