1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Bala
Last Modified: திங்கள், 19 அக்டோபர் 2015 (13:07 IST)

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முன்னணி பெண் போராளி தமிழினி மரணம்

இலங்கையில்  விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முன்னணி பெண் போராளியான தமிழினி புற்று நோயால் மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறுகிறது.


 

1991-ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக்கொண்டவர் தமிழினி. அவரது இயற்பெயர் சிவகாமி ஜெயக்குமரன். புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலமானார். அவரது உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவரது மறைவு குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

எம் மக்களுக்காக அல்லும் பகலும் இயங்கி கொண்டிருந்த எங்கள் தமிழினியின் இழப்பு எங்களோடு அன்றாடம் பழகிய ஒருவரை இழந்து விட்டதுபோன்ற உணர்வலைகளை தோற்றுவிக்கிறது.பெண் போராளிகளிடையே தன்னம்பிக்கையை வளர்த்து, உலகஅறிவு மற்றும் காலத்திற்கேற்ற அரசியல் நிலைமை போன்றவற்றில் அவர்கள் தேர்ச்சி பெற தமிழினி கடுமையாக உழைத்தார். இன்று அவர் எம்முடன் இல்லை. இவரைப் போன்று விடுதலைப் போரில் தம்மை முழுமையாக அர்ப்பணித்தும், நோய் வாய்ப்பட்டும் பல போராளிகள் சமீபத்தில் மரணம் அடைந்துள்ளனர்.

அவர்களின் தாயக விடுதலை வேட்கையை எவராலும் அழித்து விடவோ, மறுத்து விடவோ முடியாது. எங்கள் வாழ்விற்காக உங்களை வருத்தி நீங்கள் சிந்திய ரத்தத்தையும், வியர்வையையும் தமிழர் நாம் மறவோம். இலக்கு வெல்லும் வரை உங்களது கனவோடு எமது பயணம் தொடரும் என்பதை உறுதியோடு கூறிக்கொள்கிறோம். போராளி தமிழினி மறைவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேம் என்று கூறப்பட்டுள்ளது.