புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (10:35 IST)

குழந்தை பிறந்தால் தந்தைக்கும் 5 மாதம் சம்பள விடுமுறை: பின்லாந்து அதிரடி!

சன்னா மரீன் - பின்லாந்து பிரதமர்
குழந்தை பிறந்தால் தாய்க்கு 5 மாதம் விடுமுறை வழங்குவது போல தந்தைக்கும் வழங்க பின்லாந்து அரசு முடிவெடுத்துள்ளது.

பெண் உறுப்பினர்களை அதிகமாக கொண்ட பின்லாந்து அரசு சமீப காலமாக பல்வேறு புதிய நடைமுறைகளை பின்லாந்தில் அமல்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஊழியர்களில் வேலை நேரம் 6 மணி நேரமாகவும், வேலை நாட்கள் வாரத்திற்கு 4 நாட்களாகவும் குறைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது குழந்தை பிறந்தால் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது போல, குழந்தையின் தந்தைக்கும் வழங்க பின்லாந்து அறிவித்துள்ளது. குழந்தைகளை பெண்கள் மட்டுமே பராமரிக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி அதில் ஆண்களுக்கும் பங்கு உண்டு என்பதை ஏற்படுத்தவே இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக பின்லாந்து அரசு கூறியுள்ளது. அரசின் இந்த புதிய நடைமுறைக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.