டொனால்டு டிரம்ப் தற்போதைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா??
அமேரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு, ஏராளமான சொத்துக்களை சம்பாதித்துள்ளார்.
டிரம்புக்கு நியூயார்க்கில் உள்ள மான்காட்டனின் மத்திய பூங்காவுக்கு அருகே 58 மாடி கொண்ட பிரமாண்ட கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ள 3 அடுக்குகளை தனது வீடாக மாற்றி இருக்கிறார். 30 ஆயிரம் சதுரடி அடி பரப்பில் வீடு இருக்கிறது.
டிரம்புக்கு 3 மனைவிகள், முதல் 2 மனைவிகளை விவாகரத்து செய்து விட்ட அவர், தற்போது 3-வது மனைவி மெலேனியாவுடன் இந்த வீட்டில் வசித்து வருகிறார். மெலேனியா மூலம் பாரன் என்ற 10 வயது மகன் இருக்கிறான். 3 பேரும்தான் இந்த வீட்டில் வசித்து வருகிறார்கள்.
வீடு முழுவதும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதன் நுழைவு வாயில் கதவு வைரம் மற்றும் தங்க தகடுகளால் வார்க்கப்பட்டு உள்ளது.
உள்ளே சென்றதும் உள்ள விசாலமான வரவேற்பு அறை மேற்கூரை முழுவதும் தங்க தகடுகள் மற்றும் விலை உயர்ந்த மார்பிள்கள், கிறிஸ்டல் கற்கள் போன்றவற்றால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
பிரபல கட்டிட வடிவமைப்பு நிபுணர் ஆன்ஜிலோ டோங்கியோ இந்த வீட்டை அலங்கரித்து கொடுத்துள்ளார். வெர் சல்லர்ஸ் அரண்மனையின் ஒவ்வொரு அறைகளும் எந்த தோற்றத்தில் இருந்தனவோ அதே போன்றே இங்குள்ள அறைகளும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
14-ம் லூயி பயன்படுத்திய இருக்கைகள், மேஜைகள் மற்றும் அலங்கார பொருட்கள் போலவே இங்கே அத்தனை பொருட்களும் உள்ளன.
அறைகளில் இருக்கும் திரை சீலைகளில் கூட தங்க இழைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவையும் பிரெஞ்சு மன்னர்கள் பயன்படுத்திய திரை சீலைகள் போலவே உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் கிரேக்க அப்பல்லோ கடவுளின் தங்க சிலையும் அவரது அறையில் அலங்கார பொருளாக இருக்கிறது.
பாரன் பிறந்தபோது தள்ளி செல்லும் வண்டிபோல தங்கத்தால் ஆன ஒரு தொட்டில் தயாரிக்கப்பட்டது. பாரன் விளையாட பயன் படுத்தும் பொம்மைகளின் விலை மட்டுமே பல கோடி ரூபாய் இருக்கும். மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தில் இருந்து விசேஷமாக தயாரிக்கப்பட்ட பொம்மை கார் ஒன்று வாங்கி கொடுத்துள்ளார். பேட்டரியில் இயங்கும் இந்த காரின் விலை மட்டுமே ரூ.28 லட்சம்.
இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.650 கோடி. மொத்தத்தில் அவரது சொத்து மதிப்பு ரூ.22 லட்சம் கோடியாக இருக்கலாம்.