மனைவியை விவாகரத்து செய்தது முட்டாள்தனமான முடிவு: பில்கேட்ஸ்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பில்கேட்ஸ் தனது மனைவி மெலிண்டா என்பவரை விவாகரத்து செய்த நிலையில் மனைவியை விவாகரத்து செய்த முடிவு முட்டாள்தனமானது என தற்போது ஒப்புக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய போது என் வாழ்நாளில் நான் நிறைய தவறுகளை செய்துள்ளேன், ஆனால் 27 ஆண்டு காலமாக வாழ்ந்த என்னுடைய மனைவியை நான் விவாகரத்து செய்து திருமண உறவை முடிவுக்கு கொண்டு வந்ததுதான் நான் செய்ததிலேயே மிகவும் முட்டாள்தனமான தவறு. இவ்வளவு பெரிய ராஜ்யத்தை உருவாக்க தனது மனைவி தனக்கு எந்த அளவுக்கு உதவினார் என்பதையும் பில்கேட்ஸ் அந்த பேட்டியில் பகிர்ந்து உள்ளார்.
மேலும் பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி என்பவர் உடன் தனது கடந்த கால நட்பு இருந்தது என்றும் அதுவும் நான் செய்த ஒரு பெரிய தவறு என்றும் அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டு உள்ளார்.
பில்கேட்ஸ் தனது மனைவியை கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்த நிலையில் விவாகரத்து பெற்ற நான்கு ஆண்டுகள் கழித்து தனது முடிவு தவறு என்பதை அவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva