புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam

வங்கக்கடலில் மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு. 116 பேர்களின் கதி என்ன?

அந்தமான் தீவு அருகே வங்கக்கடலில் இன்று மதியம் 116 பேருடன் சென்ற மியான்மர் நாட்டின் ராணுவ விமானம் திடீரென மாயமானது. இந்நிலையில் தற்போது இந்த விமானத்தின் பாகங்கள் கடலில் இருந்து கிடைத்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த விமானத்தில் சென்ற 116 பேர்களின் கதி என்ன என்பது குறித்து எந்தவித தகவலும் இல்லை.



 


இன்று மதியம் விமானம்  ரேடார் பாதையில் இருந்து திடீரென மறைந்ததும் உடனடியாக விமானத்தை தேடுவதற்கு நான்கு கடற்படைக் கப்பல்கள் மற்றும் இரண்டு விமானப்படை விமானங்கள் அனுப்பப்பட்டன. பலமணி நேரம் தீவிர தேடலுக்கு பின்னர் மாயமாய் மறைந்த விமானத்தின் பாகங்களை அந்தமான் கடற்பகுதியில் கண்டெடுத்ததாக மீட்ப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டவெய் என்ர நகரத்தின் மேற்கே சுமார் 20 மைல் தொலைவில் அந்தமான் கடற்பகுதியில் விமானத்தின் பாகங்கள் கிடைத்துள்ளதாகவும், ஆயினும் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என்றும் மியான்மர் அரசு தெரிவித்துள்ளது. எனவே 116 பேர்களின் குடும்பத்தினர் கடும் அச்சத்தில் உள்ளனர்.