ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 28 ஜூலை 2016 (09:42 IST)

கரப்பான் பூச்சியிலிருந்து பால் : எருமை பாலை விட 3 மடங்கு புரதம் அதிகமாம்

கேட்பதற்கு உவ்வே என்கிறீர்களா?.. ஆனால் இது உண்மை. கரப்பான பூச்சி பார்த்தாலே பலருக்கு அலர்ஜிதான். ஆனால் அதிலிருந்து பால் எடுக்கமுடியும் என்று நீருபித்துள்ளார்கள் பெங்களூரில் உள்ல ஸ்டெம் செல் பயாலஜி இன்ஸ்டியூட்டைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள்.


 

 
பொதுவாக அனைத்து கரப்பான் பூச்சிகளும் பாலை உற்பத்தி செய்வதில்லை. பசுபிக் பகுதிகளில் வாழும் கரப்பான் பூச்சிகள், தங்களின் குஞ்சுகளுக்கு ஒருவித பாலையே உணவாக அளிக்கிறது. அந்த பாலில்தான் புரோட்டின் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும், அந்த பால், நமது எருமைப்பாட்டின் பாலில் உள்ள புரோதத்தை விட 3 மடங்கு அதிகம் என்றும், அதிக கலோரி நிறைந்தது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
 
அதேபோல், அந்த கரப்பான் பூச்சியிலிருந்து எடுக்கப்படும் பாலில், மனிதர்களுக்கு தேவையான அமினோ அமிலங்களும் அடங்கியிருப்பதால், எதிர்காலத்தில் மனிதர்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.