வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 18 நவம்பர் 2016 (17:17 IST)

மோடியின் அறிவிப்பு ஒரு அரசியல் காமெடி ; மோசமான சதி - சீன பத்திரிக்கைகள் விமர்சனம்

கருப்பு பண ஒழிப்பு என பிரதமர் மோடி, சமீபத்தில் அறிவித்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு ஒரு அரசியல் காமெடி என சீன பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன.


 

 
புதிய ரூபாய் நோட்டுகளை பெற மக்கள் வங்கி மற்றும் ஏ.டி.எம் மையங்களில் சாமான்ய மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். மத்திய அரசின் இந்த முடிவு, பொதுமக்களை வெகுவாக பாதித்துள்ளதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில், மோடியின் அறிவிப்பை சீன நாட்டு பத்திரிக்கைகள் கடுமையாக கிண்டலடித்து விமர்சனம் செய்துள்ளன. குளோபல் டைம்ஸ் என்ற பத்திரிக்கை “ இந்திய பிரதமர் மோடியின் அறிவிப்பு பாகுபாடற்ற மோசமான சதி அல்லது ஒரு காஸ்ட்லி அரசியல் ஜோக். இது போன்ற தைரியமான  முடிவுகளை எடுக்கும் போது, அது மகிழ்ச்சியான முடிவை அடைய போதுமான அரசியல் அறிவு வேண்டும். ஆனால் அதில் மோடி அரசு தவறிவிட்டது. 
 
உத்தரப்பிரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில், வரவுள்ள தேர்தலை மனதில் கொண்டே, மோடி அரசு இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது. 
 
மேலும், மோடி கருப்புப் பணத்தை ஒழிக்க முயற்சிக்கும் ஒரு ஹீரோ என்ற பிம்பத்தை நிலைநிறுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.