திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 30 அக்டோபர் 2020 (15:41 IST)

நான்தாண்டா இனிமேலு.. வந்து நின்னா தர்பாரு! – 2035 வரை ஜின்பிங்தான் அதிபர்!

தற்போது சீன அதிபராக பதவி வகித்து வரும் ஜீ ஜின்பிங்கை மேலும் 15 ஆண்டுகளுக்கு அதிபராக இருக்க செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய உலகளாவிய சூழலில் சீனாவின் முடிவுகள் அமெரிக்காவிற்கும், சீனாவின் அண்டை நாடுகளுக்கும் பெரும் பிரச்சினைகளை அளித்து வருகின்றது. தைவான், இந்தியாவுடன் எல்லைகளில் பிரச்சினை, அமெரிக்காவுடன் வர்த்தகரீதியான போர் என சீனாவின் மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் சீன கம்யூனிஸ்டு கட்சியின் ஆண்டு விழா நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போதைய அதிபரான ஜீ ஜின்பிங்கை மேலும் 15 ஆண்டுகளுக்கு சீனாவின் அதிபராக பதவி வகிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 2035 வரை சீனாவின் அதிபராக ஜீ ஜின்பிங் பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் ஜீ ஜின்பிங் ஆட்சியில் ஏற்கனவே சக நாடுகளுடனான பரஸ்பர உறவுகளில் விரிசல் விழுந்துள்ள நிலையில், மேலும் 15 ஆண்டுகள் அவரது பதவியை நீட்டித்திருப்பது உலகளாவிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.