செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 23 ஆகஸ்ட் 2023 (13:42 IST)

சந்திராயான் 3 லேண்டரை நிலவில் தரையிறக்கும் நடைமுறை மாலை 5.44 மணிக்குத் தொடங்கும் - இஸ்ரோ

chandrayaan 3
விக்ரம் லேண்டர் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தவுடன்  நிலவில் சந்திரயான் 3 லேண்டரை தரையிறக்குவதற்கான கட்டளையை இஸ்ரோ விஞ்ஞானிகள் பிறப்பிக்கவுள்ளனர்.

சமீபத்தில் சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்காக வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. தற்போது நிலவுக்கு சில கிலோமீட்டர்கள் மேலே உயரத்தில் சுற்றி வரும் விக்ரம் லேண்டர் மெல்ல நிலவில் தரையிறங்க தயாராகி வருகிறது. இன்று மாலை  விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவது குறித்த நேரலை ஒளிபரப்பு 5.20 மணி முதல்  தொடங்க உள்ளதாக இஸ்ரோ அறிவித்தது.

இந்த நிலையில்,  இன்று பிற்பகல் 3 மணிக்கு லேண்டரில் இருந்து வரும் தரவுகளை பொறுத்து சமிக்ஞைகள் செயல்படுத்தப்படும் என்றும், சமிக்ஞைகளை செயல்படுத்த இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், சந்திராயான் 3 லேண்டரை நிலவில் தரையிறக்கும் செயல்முறை இன்று  மாலை 5.44 மணிக்குத் தொடங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

விக்ரம் லேண்டர் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தவுடன்  நிலவில் சந்திரயான் 3 லேண்டரை தரையிறக்குவதற்கான கட்டளையை இஸ்ரோ விஞ்ஞானிகள் பிறப்பிக்கவுள்ளனர்.

மேலும், லேண்டர் வாகனம் மெல்ல மெல்ல நிலவை  நோக்கி தானியங்கி முறையில்  இறங்கத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டடுள்ளது.

உலகமே உற்று நோக்கி வரும் சந்திரயான் 3 –ன்  வெற்றியைக் கொண்டாட இந்தியர்கள் தயாராகி  வருகின்றனர்.