பிரிட்டன்: மூன்று முறை தீவிரவாத தாக்குதல் நடந்தும் குறையாத கும்மாளங்கள்
பிரிட்டனில் கடந்த ஒரே மாத இடைவெளியில் தீவிரவாதிகள் மூன்று முறை தாக்குதல் நடந்தும் அதைப் பற்றிய கவலைகளை ஒருசில நாட்களில் மறந்துவிட்டு இரவு நேர பார்ட்டிகளில் மீண்டும் தங்கள் கவனத்தை செலுத்த தொடங்கிவிட்டனர் பிரிட்டன் இளைஞர்கள்
குறிப்பாக தலைநகர் லண்டனில் நள்ளிரவில் மதுபானத்தில் மூழ்கிய இளம்பெண்கள் அரைகுறை ஆடையுடன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாகவே காணப்படுகிறது.
நள்ளிரவுக்கு மேல் கொண்டாட்டம், அதிகப்படியான சத்தத்துடன் கூடிய பாடல்கள் இவற்றை காவல்துறையினர் ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அந்த பகுதியில் வாழும் மக்கள் முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகக்து.