கொரோனா பற்றி தவறான தகவல் - பிரேசில் அதிபரின் காணொளிகள் நீக்கம்
பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவின் காணொளிகள் சிலவற்றை இணையதளத்தில் இருந்து யூடியூப் நீக்கியுள்ளது.
கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்களைப் பகிர்ந்ததற்காக பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவின் காணொளிகள் சிலவற்றை தங்கள் இணையதளத்தில் இருந்து யூடியூப் நீக்கியுள்ளது.
கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாடு காரணமாக இந்த முடிவை நாங்கள் எடுக்கவில்லை; உள்ளடக்க விதிகள் காரணமாகவே நீக்கியுள்ளோம் என்றும் அந்த நிறுவனம் தெரிவிக்கிறது. கொரோனா பெருந்தொற்று தொடங்கியது முதலே பொது முடக்கம், முக்கவசம் அணிதல், தடுப்பூசிகள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்து வந்தார்.