அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் ஏற்பட்ட விமான விபத்தை தொடர்ந்து பிலடெல்பியாவில் மீண்டும் ஒரு விமான விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்கள் முன்னதாக அமெரிக்க தலைநகர் வாஷிங்க்டனில் விமானம் ஒன்று தரையிறங்கியபோது, ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வந்து மோதியதில் 67 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது மற்றொரு விமான விபத்து பிலடெல்பியாவில் நடந்துள்ளது.
அமெரிக்காவின் பிலடெல்பியாவில் 6 பேர் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து பல வீடுகள் மீது மோதி தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 6 பேருமே பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K