செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 7 ஜூன் 2018 (12:20 IST)

மண்டியிட்டு கெஞ்சியதால்தான் இந்த சந்திப்பு: அமெரிக்கா வெளியிட்ட சர்ச்சை தகவல்...

அணு ஆயுத சோதனைகள் காரணமாக வடகொரியா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருந்தது, இதனால் வடகொரியா மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது. 
 
அதன் பின்னர் தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒளிம்பிக் வடகொரிய அதிபரிடம் சில மாற்றங்களை ஏற்படுத்தியது. வடகொரியா மற்றும் தென் கொரியா அதிபர்களின் சந்திப்பு கொரியா தீபகர்பத்தில் எப்போதும் நிலவிவந்த போர் பதற்றத்தை தணித்தது. அதன் பின்னர் வடகொரியா அதிபர் சீனாவிற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 
 
வடகொரியா மற்றும் அமெரிக்கா நாட்டு அதிபர்களான கிம் மற்றும் டிரம்ப் வரும் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க உள்ளனர். ஆனால் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல்களால் டிரம்ப் இந்த சந்திப்பை திடீரென ரத்து செய்தார். பின்னர் திட்டமிட்டபடி சந்திப்பு நிகழும் என அறிவித்தார். 
 
இந்நிலையில், இது குறித்து சர்ச்சை தகவல் ஒன்று வெளியாகியுள்ளது இந்த தகவலை, டிரம்ப்பின் தலைமை வழக்கறிஞரும், நியூ யார்க் நகர முன்னாள் மேயருமான ரூடி கிலியானி வெளியிட்டுள்ளார்.
 
அவர் கூறியதவாது, வடகொரிய அதிபர் கிம், மண்டியிட்டு கெஞ்சி கேட்டதனால்தான் அவரை சந்திக்க டிரம்ப் மீண்டும் ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார். இருநாட்டு அதிபர்களும் இன்னும் சில தினங்களில் சந்திக்கவுள்ள நிலையில், இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.