1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (21:28 IST)

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: பாகிஸ்தான் அமைப்பின் கமாண்டர் உயிரிழப்பு

Bomb
ஆப்கானிஸ்தான் நாட்டில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு ஒன்றின் கமாண்டர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன
 
அமெரிக்காவில் தேடப்பட்ட பயங்கரவாதி பட்டியலில் இருந்து வரும் உமர் காலிக் என்பவர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 3 மில்லியன் டாலர் வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்க அறிவித்திருந்தது 
 
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று சென்ற கார் ஒன்று திடீரென வெடித்து சிதறியது இந்த காரில் அமெரிக்காவால் தேடப்பட்ட உமர் காலிக் உள்பட 3 பேர் இருந்ததாகவும் அவர்கள் மூவரும் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.