ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 12 மே 2016 (12:19 IST)

ரயில் முன் பாய்ந்து தற்கொலையை லைவ் வீடியோ அனுப்பிய 19 வயது இளம்பெண்

19 வயது இளம்பெண் ஒருவர் பிரான்ஸில் உள்ள பாரிசில் ஒரு புறநகர் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். தான் தற்கொலை செய்துகொள்ளும் வீடியோவை லைவாகா பெரிஸ்கோப் மூலம் வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


 
 
பெயர் தெரியாத அந்த பெண் அந்த வீடியோவில் தான் பலாத்காரம் செய்யப்பட்டதையும் பலாத்காரம் செய்தவர்களையும் பற்றி கூறியுள்ளார். அவர்கள் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறினார் என தகவல்கள் கூறுகின்றன.
 
தற்கொலை சம்பவம் நடைபெற்ற அந்த சுற்றுவட்டாரத்தில் செவ்வாய் கிழமை முதல் விசாரணை ஆரம்பித்துள்ளது. அந்த தொலைப்பேசியில் உள்ள வீடியோவை மீட்டு பகுப்பாய்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 
 
அந்த பெரிஸ்கோப் வீடியோவை ஏற்கனவே யாரோ ஒருவர் பார்த்து தங்களுக்கு தகவல் தந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
 
பெரிஸ்கோப் என்பது ஒரு ஸ்மார்ட்போன் செயலி. இந்த செயலி மூலம் டுவிட்டர் அக்கவுண்டை பயன்படுத்து நேரடி ஸ்ட்ரீம் வீடியோ அனுப்பலாம்.