வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 2 ஜூலை 2017 (19:04 IST)

பாகிஸ்தான் சிறையில் 494 இந்திய மீனவர்கள்

பாகிஸ்தான் சிறையில் 546 இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் நாட்டு சார்ப்பில் இந்திய தூதரகத்தில் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.


 

 
பாகிஸ்தான், இந்தியா ஆகிய இருநாடுகளின் தூதரக அணுகல் ஓப்பந்தததின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் 1ஆம் தேதி எதிர்தரப்பு கைதிகளின் பட்டியலை வழங்க வேண்டும். அதன்படி பாகிஸ்தான் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய கைதிகளின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
 
மொத்தம் 546 கைதிகள் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் 494 பேர் மீனவர்கள். மீதம் 52 பேர் மற்ற இந்தியர்கள் ஆவர். இதேபோன்று இந்திய சிறையில் உள்ள பாகிஸ்தான் கைதிகளின் பட்டியல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.