Last Modified: ஞாயிறு, 19 பிப்ரவரி 2017 (12:34 IST)
24 மணி நேரத்தில் 27 மாரடைப்புகள். உயிர் பிழைத்த அதிசய மனிதர்
ஒருமுறை மாரடைப்பு வந்தாலே உயிர் போய்விடுகின்ற இந்த காலத்தில் ஒரே நாளில் அதாவது 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 27 முறை மாரடைப்பு ஏற்பட்டும் உயிர் பிழைத்துள்ளார் லண்டனை சேர்ந்த ஒருவர்
லண்டன் நகரை சேர்ந்த 54 வயது ரேவுட் ஹால் என்பவருக்கு சமீபத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து கொண்டு இருக்கும்போதே தொடர்ந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்து கூடுதல் கவனத்துடன் சிகிச்சை அளித்தனர்.
இவ்வாறு 24 மணி நேரத்தில் 27 தடவை மாரடைப்பு தாக்கிய போதிலும் அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாவும் இனிமேல் அவருக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ரேவுட் ஹால் கூறியபோது, 'ஒரு நாளில் 27 தடவை நான் செத்து பிழைத்து இருக்கிறேன். டாக்டர்கள் தான் எனது உயிரை காப்பாற்றியுள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறினார்.