1. ஆன்மிகம்
  2. »
  3. ஜோ‌திட‌ம்
  4. »
  5. வா‌ஸ்து
Written By Ravivarma
Last Updated : சனி, 26 ஏப்ரல் 2014 (19:39 IST)

வீட்டில் சமையலறை அமைக்கும் முறை...

உணவு, இருப்பிடம், உடை இம்முன்றும் மனித வாழ்கையின் அடிப்படை தேவைகள் ஆகும். அவற்றில் மனிதன் உயிர் வாழ மிகவும் முக்கியமானது உணவு. 
நாம் உண்ணும் உணவே நம் உடலில் மருந்தாக செயல்படுகின்றது. எனவே ஆரோகியமான உணவு உண்பது அவசியமானது. அதனால் ஒரு வீட்டில் சமையலறை அமைக்கும் முன்பு கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிமுறைகள்.
 
ஒரு வீட்டில் சமையலறையை தென்கிழக்கு அல்லது வடமேற்கு பகுதியில் அமைத்துக்கொள்ள வேண்டும்.
 

சமையலறையில் சமைக்கும் போது கிழக்கு திசையை நோக்கியவாறு சமைப்பது நல்லது.
 
சமையலறையின் வாசல் உச்ச பகுதியில் அமைக்கப்பட வேண்டும். மேலும் தென்கிழக்கு சமையலறையில் கிழக்கு சுவரில் வடக்கு ஒட்டி ஜன்னல் அமைக்கவேண்டும்.
 
பாத்திரங்கள் கழுவும் (sink) இடத்தை சமையலறையின் வடகிழக்கு அல்லது வடமேற்கு பகுதியில் அமைக்கவேண்டும்.
 
பல்பொருள் வைத்துக்கொள்ள அலமாறிகளை மேற்கு அல்லது தெற்கு சுவர்களில் அமைத்துக்கொள்ளலாம்.
 
தென்கிழக்கு சமையலறையில் புகைவிசிறியை (Exhaust Fan) தெற்கு சுவரில் அமைத்துக்கொள்ளவேண்டும்.
 
சமையலறையில் அமைக்கப்படும் பின் வாசல் அதன் உச்சதில் இருக்க வேண்டும்.
 
சமையலறைக்கும், உணவு பரிமாறும் அறைக்கும் நடுவில் Arch போன்று வளைவான துவாரங்கள் இருக்ககூடாது.