வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Sasikala

தென் கிழக்கு திசையில் அமர்ந்து படிப்பதால் ஏற்படும் பலன்கள்...!

அக்னி திசை என்று அழைக்கப்படும் தென் கிழக்கு திசைக்கு உரிய மூர்த்திகள் ஸ்ரீஸ்வாஹா தேவி சமேத அக்னி மூர்த்தியாவார். படுக்கை அறை தென்கிழக்கு திசையில் அமைத்தல் நலம். அல்லது படுக்கைகளை தென் கிழக்கு திசைகளில் அமைக்கலாம். 
மருத்துவர்கள் தங்கள் ஸ்டெதாஸ்கோப் போன்ற உபகரணங்களை தங்கள் மேஜையின் நடுவில் வைத்தல் நலம். ஆனால், அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தும் கத்தி போன்றவற்றை தென்கிழக்கில் வைத்தல் உத்தமம்.
 
கடினமான பாடங்களைப் பயிலுவோர் தென்கிழக்கு திசையில் அமர்ந்து படித்தால் எளிதில் கிரகிக்க முடியும். விஷயங்களைக் கிரகிக்க தென் மேற்கு திசையான நிருத்தி திசையும் வாய்ப்பாடு, சூத்திரங்கள் போன்றவற்றை மனப்பாடம் செய்ய தென் கிழக்கு திசையும் மாணவர்களுக்கு  உதவும் திசைகளாகும்.
 
ருத்ரம், சமகம், அக்னி மந்திரங்கள், மேதா சூக்தம், சரஸ்வதி துதிகள், ஹயக்ரீவர் தோத்திரம் போன்றவற்றை தென் கிழக்கு திசையில் அமர்ந்து ஒதினால் அவற்றின் பலன்கள் பத்து மடங்காய்ப் பெருகும்.