வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வீட்டில் வைத்து வணங்கவேண்டிய தெய்வங்களின் படங்கள் எவை தெரியுமா...?

ஞானத்தினை போதிக்கும் தட்சிணாமூர்த்தியின் படம் வீட்டில் வைத்து வணங்கி வழிபாடு செய்வது நன்று. இதனால் அறிவும் ஞாபக சக்தியும் உண்டாகும். கல்வி ஞானம் கிட்டும். ஞாபக மறதி உடைய குழந்தைகள் வணங்க வேண்டிய வடிவம் இதுவே. கல்வி, செல்வம், வீரம் மூன்றும்  கிட்டும்.
கலைமகளின் படமும் வீட்டில் வைத்து வணங்கத் தக்கதே. இதனால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பேச்சுத்திறமையும்,  எழுத்துத்திறமையும் உண்டாகும். நமது வளமான வாழ்விற்கு வாணி வழிகாட்டுவாள். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும்.
 
லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். குபேரனுக்கு அருள் பாலிக்கும் லட்சுமி படமும், லட்சுமி மற்றும் குபேரன் இவர்கட்கு அருள் பாலிக்கும் சிவபெருமானின் படமும் மிகவும் சிறந்தவை. இத்தகைய படங்களை வைத்து வணங்கி வர 16 பேறுகளும் கிட்டும். 8  ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
 
அலர்மேல்மங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமானின் படம் வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொழிலில் நல்ல வருமானமும், சுகமான வாழ்க்கையும் அமையும். மேற்கண்ட படத்துடன் லட்சுமியின் படமும் இருப்பது மிகவும் சிறப்பானது.
 
துர்க்கையின் படம் வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. இதனால் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும். கணவன் மற்றும் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும். செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். வியாபாரம் பெருகும்.
 
அன்னம் பாலிக்கும் அன்னபூரணியின் படம் நாம் அவசியம் வீட்டில் வைத்து வழிபாடு செய்தல் மிகவும் சிறப்பானது. இதன் மூலம் வறுமை, பசி, பட்டினி, பஞ்சம் தீரும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிட்டும்.
 
சித்தர்கள், மகான்கள், முனிவர்கள், யோகிகள், ரிஷிகளின் படங்களையும் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இதனால் குருவருள் வந்து சேரும். தோஷங்கள் விலகும். கர்மவினைகள் நீங்கி புண்ணியம் சேரும். வளமான நிம்மதியான வாழ்க்கை கிட்டும்.