வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு
Written By

குடும்ப தலைவிகளுக்கான சில பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!

சமைக்க வாங்கி வைத்துள்ள காளான்களை பிளாஸ்டிக் கவரினுள் போட்டு வைப்பதற்கு பதிலாக, பேப்பரில் சுற்றி வைத்தால் நீண்ட  நேரத்துக்கு ஃப்ரெஷாக இருக்கும்.
வீட்டில் இரவு விளக்கின் நிறம் நீல கலராகவே வைத்திருங்கள். நீலநிற ஒளிக்குக் கொசுக்கள் அதிகம் வராது.
 
புதிய பருத்தி ஆடைகளை முதன்முதலில் துவைக்கும்போது சாயம் போகாமலிருக்க, வெறும் குளிர்ந்த நீரில் நனைத்து புளிக் கரைசலில் சிறிது நேரம் ஊறிய பிறகு அலசி எடுத்தால், சாயம் போகாது. முதல் சலவையின் போது சோப் உபயோகிக்கக் கூடாது.
 
பச்சைப் பட்டாணி நிறைய வாங்கிவிட்டால் உரித்து பிளாஸ்டிக் கவரில் போட்டு வாயை நன்றாகக் கட்டி குளிர்சாதனப் பெட்டியின் ஃப்ரீஸரில் வைத்தால், எத்தனை நாளானாலும் கெடாமல் பசுமையாக இருக்கும்.
 
தரையில் ஏற்படும் கரைகளை போக்க, வினிகர் கலந்த நீரில் துணியை முக்கி அழுத்தித் துடைத்தால் கறை போய்விடும்.
 
மிளகாய் வற்றலை வறுக்கும்முன் அதனுடன் அரை ஸ்பூன் சாதாரண உப்பைச் சேர்த்தால், மூக்கைத் துளைக்கும் நெடி வராது.
 
பிரம்பு நாற்காலிகளை சோப்பு நீரில் கழுவினால் பளிச்சென்று சுத்தமாகிவிடும்.
 
எண்ணெய்ப் பிசுக்கு உள்ள பாத்திரத்தை கொதிக்க வைத்து சிறிது உப்பு போட்டு ஊறவைத்து, பின்பு கழுவினால் பாத்திரம் பளிச்சென்று  இருக்கும்.
 
கண்ணாடிப் பாத்திரங்களின் அடியில் கரைகள் இருந்தால், சில சொட்டு எலுமிச்சம் பழச்சாறு, சிறிதளவு தண்ணீர் கலந்து குலுக்கினால்,  கறைகள் நீங்கிவிடும்.