பெண்களுக்கான வீட்டு குறிப்புகள்
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து கொண்டு எப்படி நோயின்றி வாழலாம் என்பதை அறிவோம்.
1. சிறிய வெங்காயம், எலுமிச்சை சாறு, மிளகாய், உப்பு சேர்த்து சாப்பிட்டு வர கொழுப்பை கரைத்து விடும்.
2. தெங்காய் உடைத்தவுடன் உப்பு தடவி வைக்க வேண்டும். அலலது உப்பு தண்ணீரில் ஊற வைக்க நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
3. அம்மை வந்தால் வெப்பங்கொழுந்து, விரலிமஞ்சள் சேர்த்து உருண்டையாக்கி சாப்பிடவும். காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது.
4. ஜவ்வரிசியை வறுத்து உடைத்து ஊற வைத்து உப்புமா செய்யலாம்.
5. வாழைப்பூ அறிந்தவுடன் மோரில் போட்டு வைத்தால் கருத்து போகாமல் பாதுகாக்கலாம்.
6. கற்பூர டப்பாவில் சிறிது உப்பு, மிளகை போட்டு வைத்தால் கரையாமல் இருக்கும்.
7. அன்றாட சமையலில் மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள், வெங்காயம் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை.
8. மீன் வறுக்கும் போது புளித் தண்ணீர் அல்லது தயிர் சேர்த்து ஊற வைத்து வறுத்தால் சுவை கூடும்.
9. பிரியாணி செய்ய இஞ்சி, பூண்டு விழுதை வதக்கும் போது சிறிது உப்பு சேர்த்து வதக்கினால் அடி பிடிக்காது.
10. சுளுக்கு வந்தால் தேங்காய் எண்ணெய் காய்ச்சி பூண்டு சேர்த்து ஆற வத்து தேய்த்தால், சுளுக்கு வந்த இடம் தெரியாமல் போய்விடும்.