புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வியாழன், 15 மார்ச் 2018 (13:54 IST)

தமிழ் ஹீரோவை ஓங்கி அறைந்தேன்: ராதிகா ஆப்தே பளீச்

தமிழில் தன்னுடன் நடித்த ஹீரோ தவறாக நடந்து கொண்டதால் அவரை ஓங்கி அறைந்ததாக  ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

 
 
ராதிகா ஆப்தே தமிழில் அஜ்மல் நடித்த வெற்றிச்செல்வன் படம் மூலம் அறிமுகமானார். பின்பு தோனி, கபாலி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். மேலும், இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.
 
இவர் சமீபத்தில் தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறியிருந்தார். இந்நிலையில், பிரபல பாவிவுட் நடிகை நேகா துபியா நடத்திய நிகழச்சியில் அவர் கலந்து கொண்டு பேசியபோது, தமிழில் ஒரு படத்தில் நடத்திருந்தேன். அந்தப் படத்தின் ஹிரோ என்னிடம் தவறாக நடந்து கொண்டார். அவர் தமிழில் பெரிய நடிகர் இதற்கு முன்பு அவரை நான் பார்த்தது கூட இல்லை. என் உடம்பை அவர் தொட்டு தவறாக நடந்து கொள்ள முயன்றார். அதனால் அவரை நான் ஓங்கி அறைந்தேன் என்று கூறினார்.
 
ராதிகா ஆப்தே இது வரை தமிழில் 5 படங்களில் நடித்துள்ளார். அவர் அறைந்ததாக கூறும் பிரபல தமிழ் ஹீரோ யார் என்பது தெரியவில்லை.